டோக் பெருமாட்டி கல்லூரியின்

56வது பட்டமளிப்பு விழா

கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
28.01.2023

1. மாணவியர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு இணையவழிக் கட்டண இரசீதைக் (Online payment receipt) கொண்டு வரவும். அதனையே நீங்கள் நுழைவுச் சீட்டாகவும் பதிவு செய்ததற்கான அடையாளமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. பதிவு செய்த மாணவியர் மட்டுமே பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதிக்கப்படுவர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. பட்டமளிப்பு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அவற்றை டோக் பெருமாட்டி கல்லூரியின் இணையதளத்தில் கண்டு மகிழலாம்.
4. கல்லூரியின் முதன்மை நுழைவு வாயில் வழியாக மட்டுமே நீங்கள் உள்ளே வர அனுமதிக்கப்படுவீர்கள்.
5. காலை 9.00 மணிக்கு வாயிற்கதவு மூடப்பட்டுவிடும். பட்டம் வாங்குபவர்கள் அதற்குப் பின் உள்ளே வர இயலாது.
6. மாணவியர் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்காகத் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட இடத்தில், நீங்கள் காலை 9.00 மணிக்குள் உங்கள் பெயரினைப் பதிவு செய்து உங்களுக்கான சிற்றுண்டியைப் பெற்றுக்கொள்ளவும். பட்டமளிப்பு விழாவின்போது அணிந்து கொள்ளும் உடுப்பு மற்றும் மேலங்கியைப் பெறுவதற்கான டோக்கனும் நீங்கள் பெயர்ப்பதிவு செய்யுமிடத்திலேயே வழங்கப்படும். காலை 9.00 மணிக்குப் பெயர்ப்பதிவு நிறுத்தப்படும். இதற்குப் பிறகு உங்கள் பெயரைச் சேர்க்க இயலாது. காலை 9.00 மணிக்குள் பெயரைப் பதிவு செய்யத் தவறுபவர்கள் தங்களது பட்டத்தைத் துணைமுதல்வர் அலுவலகத்தில் ஜனவாி 30ம் தேதிக்கு பிறகு அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளவும்.
7. கலையியல் கட்டடத்தில் (Humanities Block) பட்டமளிப்பு விழாவிற்கான உடுப்பு மற்றும் மேலங்கியைக் காலை 7.30 மணியிலிருந்து காலை 9.00 மணிக்குள் ரூ.200/- (திரும்பப் பெறக்கூடிய தொகை) செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். காலை 9.00 மணிக்கு மேல் ஆடைகள் வழங்கப்படமாட்டாது. பட்டமளிப்பு விழாவிற்கான ஆடையை அணியாதவர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
8. மாணவியர் காலை 9.40 மணிக்குள் பொன்விழா அரங்கில் தங்களது இருக்கையில் அமர்ந்துவிடவேண்டும்.
9. பொன்விழா அரங்கில் கைபேசி மற்றும் மின்னணுப் பொருட்களுள் (iPad, Tab) எதனையும் பயன்படுத்தக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன் உங்கள் கைபேசிகளைக் கல்லூரி நாற்கரத்தில் (College Quadrangle) அமர்ந்திருக்கும் அவரவர் துறை சார்ந்த ஆசிரியரிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
10. விழா அரங்கினுள் கைபேசி மற்றும் பிற மின்னணுப் பொருட்களைப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அரங்கினுள் கைபேசியைக் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள். விழா நேரத்தில் அலைபேசி ஒலித்தால் அல்லது நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்தால் அவை தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்படும். விழா முடிந்ததும் துணைமுதல்வர் அலுவலகத்தில் நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். அப்பொருட்களுக்கு அலுவலகம் பொறுப்பாக முடியாது.
11. நீங்கள் உங்களது மின்னஞ்சல் முகவரியை உங்கள் துறையில் அளித்தீர்களானால் பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட மிகவும் தெளிவான உங்களது புகைப்படத்தின் மென்பிரதி ஒரு மாதத்திற்குள் உங்களது துறை மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
12. சிறப்பு விருந்தினர், நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறைத்தலைவர்கள் மேடையில் உள்ள அவர்களது இருக்கையில் அமரும் வரை மாணவியர் நிற்க வேண்டும்.
13. விழா நிறைவடையும் வரையிலும் மாணவியர் விழா அரங்கிலிருந்து வெளியேற அனுமதியில்லை.
14. சிறப்பு விருந்தினரும் அதிகாரிகளும் அரங்கிலிருந்து வெளியே செல்லும்வரை மாணவியர் அனைவரும் நிற்க வேண்டும்.
15. பட்டம் பெற்ற பின்னர் தங்களது உடுப்பு மற்றும் மேலங்கியை வாங்கிய இடத்தில் (கலையியல் கட்டடம்) கொடுத்து விட்டு நீங்கள் செலுத்திய முன்பணம் ரூ.200/- ஐப் பெற்றுக்கொள்ளவும். ஆடைகளை மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும். கழற்றி எங்கும் எறியக்கூடாது.

  மேலே உள்ள வழிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொண்டேன்.