தமிழ் உயராய்வு நடுவம் தமது கல்வித்திட்டங்களின் வாயிலாக மொழித்திறனும் சமுதாய அக்கறையும் தெளிந்த ஞானமும் நுட்பமாய்ப் பகுத்தாராயும் ஆற்றலும் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் அவர்களை நீதி, சமத்துவம், சுதந்திரம் போன்ற விழுமியங்களில் மேம்பட்டவர்களாக விளங்கச் செய்தலைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ் மொழியின் வளமையையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளச் செய்தலையும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெற வைத்தலையும் நோக்காகக் கொண்டுள்ளது. அதன்வழி தமிழ் மொழியில் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் மொழிபெயர்ப்புத்திறன், சமூகத்தை எதிர்கொண்டு வழிநடத்தும் ஆளுமைத்திறன், உலகை அழகியல் உணர்வுடனும் உறவுக் கண்ணோட்டத்துடனும் நோக்கும் திறன் உடையவர்களாகவும் அவர்களைச் செம்மைப்படுத்துதலைத் தமிழ் உயராய்வு நடுவம் நோக்காகக் கொண்டுள்ளது.